வேலை நேரத்தில் திருமணத்திற்கு சென்ற பள்ளி ஆசிரியர்கள்...! பாய்ந்தது 17(பி) சட்டம்...!!

பள்ளி வேலை நேரத்தில் திருமணத்திற்கு சென்ற பள்ளி தலைமையாசிரியர், 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று இந்தபள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் குபேந்திரன் உள்பட 7 ஆசிரியர்கள் பணியில் இல்லை. ஆனால் பள்ளி வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதன்மைக்கல்வி அலுவலர்இது குறித்து விசாரித்த போது, பெங்களூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்கசென்றது தெரியவந்தது..

இதையடுத்து, பள்ளி வேலை நேரத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்கள் மீது 17(பி) என்ற பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பள்ளி கல்வித் துறை மற்றும் ஆசிரியரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment