பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது.நாளை முதல், பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல், பொது தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேபோல, நீட், ஜே.இ.இ., மற்றும், சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும், பள்ளிகளில் நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், விருப்பப்படும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment