மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் குழு 'ஷிப்ட்' முறையில் கற்கும் பணியில் ஈடுபடுகின்றன. இவரது சாதனையை சாம்பியன் உலக சாதனை மையம் பதிவு செய்ய உள்ளது.சுலைகாபானு கூறுகையில், "சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இந்த சாதனையை துவங்கியுள்ளேன். தமிழகத்தில் ஆங்கில பாடத்தை தொடர்ந்து 10 மணிநேரம் கற்பித்தது சாதனையாக உள்ளது. சமூக அறிவியல் பாடத்திலான சாதனை இது தான் முதல்முறை," என்றார். இவர் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்