ஓய்வூதியம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் மனு!

15 ஆண்டுகளாக ஓய்வூதியம் இன்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்விதுறை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரபாபு கூறும்போது, "அரசின் சமூக நல திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களாக 30 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளொம். பணிசெய்த ஆண்டுகளில் 50% கணக்கிட்டு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டி, பலதரப்பட்ட  உண்ணாவிரத போராட்டம், பேரணிகள், பல போராட்டங்கள் ஆகியவை அனைத்தும்  செய்தும் எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்க்கொள்ளவில்லை.

ஆகையால் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் அவர்களை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஓய்வூதியம் குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வரும் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி  சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் மரியல் போராட்டமும், 22 ஆம் தேதி, கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளோம்" என்று கூறினார்.

No comments:

Post a Comment