ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்


இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊதியமுரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினால்இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தால், மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று கூறி, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இதனிடையே, இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பர். அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment