ஆசிரியருக்கு பரிசு

புதுச்சேரி:காட்டேரிக்குப்பம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரின் ஆய்வறிக்கை, தேசிய அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு கவுன்சில் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்த, ஒன்பதாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை நடந்தது.இதில் பெறப்பட்ட 600 ஆய்வறிக்கைகளில், 28 அறிக்கைகள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. புதுச்சேரியிலிருந்து ஆறு ஆய்வு அறிக்கைகளும், தமிழ்நாட்டிலிருந்து 19 ஆய்வறிக்கைகளும் சமர்பிக்கப்பட்டன.இதில், காட்டேரிக்குப்பம் உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் சமர்ப்பித்த, 'அறிவியல் ஆய்வின் மூலம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல்' என்ற ஆய்வறிக்கை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment