கம்ப்யூட்டரே இல்லாமல் கல்விப்பாடம்… என்ன செய்கிறது கல்வித்துறை


மத்திய அரசு கணினி கல்விக்காக தமிழகத்திற்கு 900 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை 2011ம் ஆண்டு முதல் செலவு செய்யவில்லை. மேலும் 2011ல் வெளிவந்த 6-10 வகுப்பு வரையான கணினி பாடப் புத்தகங்களை அரசு முடக்கியது. 3000 முதல் 5000 ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும்  என்று பல ஆண்டுகளாக கூறும் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாணவர்களுக்காக ஒரு பள்ளிக்கு 400க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் கொடுக்கும் அரசு அதன் பயன்பாடு குறித்து  கற்றுக் கொடுப்பது இல்லை. கணினி கல்விக்காக 3 வித பாடப் புத்தகம் தந்த அரசு, பள்ளிக்கு 3 கணினி மட்டுமே கொடுத்துள்ளது. இதில் செய்முறை தேர்வு எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை?  மத்திய அரசு பொதுவான கலைத் திட்டத்தை வழங்கியுள்ளது. ICT என்ற வார்த்தை இல்லாவிட்டால் மத்திய அரசு நிதி ஆண்டுதோறும் வருவது நிறுத்தப்படும்  என்ற காரணத்திற்காக மட்டும் தமிழக அரசு புதிய பாடத் திட்டத்தில் ஊறுகாய் போல அறிவியல் பாடத்தில் கணினி  ICT இணைக்கப்பட்டுள்ளது. சீருடையையும், 5 பாடங்களையும் மட்டும் மாற்றினால் உலகத் தரத்திற்கு இணையான கல்வி அரசு பள்ளியில் எவ்வாறு சாத்தியமாகும்?

தமிழ்நாட்டில் கணினி ஆசிரியர்கள் இன்றி 800 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பிடிஏ மூலம் கணினி ஆசிரியர்களை நியமிக்கவும் முடியாது. மேலும் நீட், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றார் மாநிலச்செய்தி தொடர்பாளர் ஜமுனாராணி இதை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்பதே எதார்த்தமாக உள்ளது..

Source:http://www.etamilnews.com/govt-schools-computer-education/

No comments:

Post a Comment