ஒரு மாதத்தில், 'ரிசல்ட்': டி.என்.பி.எஸ்.சி., சாதனை

 ஒரு மாதத்தில், 'ரிசல்ட்':  டி.என்.பி.எஸ்.சி., சாதனை

சென்னை: 'குரூப் - 2' பதவிகளில், காலியாக உள்ள, 1,300 இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவை, ஒரு மாதத்தில் வெளியிட்டு, டி.என்.பி.எஸ்.சி., சாதனை படைத்துள்ளது.அரசு துறைகளில் காலியாகும் இடங்களில், புதியவர்களை நியமிக்க, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, குரூப் - 2 வில், நேர்முக தேர்வு உள்ள, 24 வகை பதவிகளுக்கு, நவ., 11ல் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.தேர்வு முடிவுதுணை வணிகவரி அதிகாரி, நகராட்சி கமிஷனர், தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சியாளர், வேலைவாய்ப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், 1,297 காலி இடங்களை நிரப்ப, இந்தத் தேர்வு நடந்தது.முதல் நிலை தகுதி தேர்வில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களின் விடைத்தாள்கள் கணினி முறையில் திருத்தப்பட்டு, நேற்று முடிவுகள் வெளியாகின. ஒரு மாதத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, டி.என்.பி.எஸ்.சி., புதிய சாதனை படைத்துஉள்ளது.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 13 ஆயிரம் பேர், பிப்., 23ல் நடக்கும், குரூப் - 2 பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்கள், வரும், 24 முதல், ஜன., 10 வரை, பிரதான தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இளைய தளம்பிரதான தேர்வுக்கு பின், நேர்முக தேர்வு நடக்கும். இதில், தேர்வு செய்யப்படுவோர், இறுதி பட்டியலில் இடம் பெறுவர். கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment