அண்ணா பல்கலை. கேள்வித்தாள் வெளியான விவகாரம் -தலைமறைவான பல்கலை. தற்காலிக பெண் ஊழியர் கைது
அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தற்காலிக பெண் ஊழியரை  போலீசார் கைது செய்தனர். கடந்த 3-ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு கணித தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது. இதனையடுத்து  அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கேள்வி தாள் வெளியான விவகாரத்தில் பல்கலைக்கழக தற்காலிக பெண் ஊழியர் காஞ்சானவுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தலைமறைவான காஞ்சனாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சனாவை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். 

No comments:

Post a Comment