சித்தா கல்லுாரிக்கு விடுமுறை

திருநெல்வேலி:மாணவர்களின் போராட்டத்தால், நெல்லை, அரசு சித்த மருத்துவக் கல்லுாரிக்கு, காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை, அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில், போதிய விடுதி வசதியில்லை. உணவு வசதியுடன் விடுதிகளை ஏற்படுத்தக்கோரி, இரண்டு நாட்களாக, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் நடத்திய சமரசத்திற்கு பிறகும், போராட்டம் தொடர்ந்தது. எனவே, இன்று முதல் கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.

No comments:

Post a Comment