சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளுக்கான, பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், நாடு முழுவதும், 25 லட்சம் பேர் பங்கேற்பது வழக்கம். ஆண்டு தோறும், ஏப்ரலில் பொது தேர்வு நடத்தப்பட்டு, மே இறுதியில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.'தேர்வு முடிவுகள் தாமதமாக வருவதால், பல மாணவர்கள் உயர் கல்வியில் சேர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்' என, பெற்றோர் தரப்பில் புகார்கள் எழுந்தன. நீதிமன்ற உத்தரவுஇது தொடர்பாக, டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, தேர்வை முன்கூட்டியே நடத்த, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, பொது தேர்வு தேதிகளை, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இதன்படி, பிப்., 15ல் பிளஸ் 2 பொது தேர்வு துவங்கி, ஏப்., 3ல் முடிகிறது. பிப்., 15 முதல், பிப்., 27 வரை தொழிற்கல்வி மற்றும் விருப்ப பாடங்களுக்கும், மார்ச், 2 முதல் பிரதான பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்கின்றன.30 நிமிடம்பத்தாம் வகுப்பு பொது தேர்வு, பிப்., 21ல் துவங்கி, மார்ச், 29ல் முடிகிறது. மார்ச், 2 வரை விருப்ப பாடங்களுக்கும், மார்ச், 5 முதல் பிரதான பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்கின்றன.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், பகல், 1:30 மணி வரை தேர்வு நடக்கும். விடைத்தாளில், மாணவர் விபரங்களை பூர்த்தி செய்யவும், வினாத்தாளை படிக்கவும், முதல், 30 நிமிடங்கள் வழங்கப்படும். பின், 10:30 மணிக்கு, விடைகளை எழுத துவங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விபரங்களை, http://cbse.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment