மாணவர்களுக்கு இன்று தேசிய வருவாய் வழி தேர்வு

சென்னை, டிச. 15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகையை பெற, மாநில அளவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி உதவி தொகை தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தேர்வு, டிச.,1ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 'கஜா' புயல் பாதிப்பு காரணமாக, தள்ளிவைக்கப்பட்டது. இந்த தேர்வு, மாநிலம் முழுவதும், 521 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.44 லட்சம் மாணவ -- மாணவியர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment