கழிப்பறை கட்டித்தராத தந்தை : புகாரளித்த சிறுமிக்கு பாராட்டு

ஆம்பூர்: கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற கலெக்டர், அவரை பாராட்டினார்.
வேலுார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, இஷானுல்லா என்பவரின் மகள், ஹனீபா ஜாரா, 7; இரண்டாம் வகுப்பு மாணவி.இவர், கடந்த, 10ல் ஆம்பூர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், 'பல ஆண்டுகளாக கழிப் பறை கட்டித்தராமல், ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.கலெக்டர் ராமன் உத்தரவுப்படி, சிறுமியின் வீட்டில், கழிப்பறை கட்டித்தரும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் நகராட்சி துாய்மை இந்தியா திட்ட துாதராக, இந்த சிறுமி நியமிக்கப்பட்டார்.நேற்று காலை, சிறுமியின் வீட்டுக்கு சென்ற கலெக்டர் ராமன், சிறுமியை பாராட்டினார்.

No comments:

Post a Comment