திண்டுக்கல் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியானது அம்பலம் -விரிவான விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான, வேதியியல் பாட கேள்வித் தாள், திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியானது அம்பலமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வேதியியல் பாடத்துக்கான அரையாண்டு தேர்வு இன்று நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான, கேள்வி தாள் 3 தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அது தேர்வுத்துறையின் கேள்வித்தாளா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், இன்று தேர்வு நடைபெற்றபோது, வழங்கப்பட்ட கேள்வித்தாளும், முன்பு வெளியான கேள்வித்தாளும் ஒன்றுதான் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாக, கேள்வித்தாளில்  தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் கேள்விகள் இருக்கும். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் உள்ள கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியான தகவலும் அம்பலாமாகி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.  ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment