வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு

Image result for EMPLOYMENT RENEWAL

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வு மதிப்பெண், பதிவு மூப்பு பட்டியல் ஆகியவற்றையும் பரிசீலித்து, இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதும், பதிவு மூப்பை தொடர்வதும் முக்கிய தேவையாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் அலைவதை தவிர்க்க, பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியதில், சில பதிவு எண்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விடுபட்டவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதனால், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றின் பிழைகளை நீக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுஉள்ளார்.ஆன்லைனில், பதிவு எண் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, பதிவு மூப்பு மாறாமல், புதிய எண் வழங்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment