மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை சேகரித்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 கல்வி வட்டாரங்களில், 2,597 பள்ளிகள் உள்ளன.இதில், தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மெல்ல கற்கும் மாணவர்கள் சிலர் இருக்கின்றனர். இவ்வாறான மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளை, தொடக்கம் மற்றும் நடுநிலைக்கு தலா ஒன்று என, தேர்வு செய்யப்பட உள்ளது.தேர்வாகும் பள்ளிகளுக்கு, முன் மாதிரி பள்ளியாக வைத்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment