சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ஊதிய முரண்பாடுகளை கண்டித்து 3000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈருபட்டு வருகிறார்கள்.
கடந்த 31.5.2009ஆம்ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.6.2009-க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையேஉள்ள ஊதிய முரண்பாடுகளை கண்டித்து, 1.6.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3000 பேர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்
நேற்று அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, நேற்றிரவு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்துவைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மைதானத்தின் உள்ளேயே 3000-க்கும் அதிகமானஇடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment