ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்) 350கும் மேற்பட்ட தகுதியுடைய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் ( 03.12.2018 ) அன்று எங்களது கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.

இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் விரைவில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

உங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் விரைவில் நடைபெறும் எனவும் உறுதியளித்தனர்..


🙏🙏🙏🙏
ரா.தங்கேஸ்வரன்
உடற்கல்வி ஆசிரியர்
விருதுநகர்
ஒருங்கிணைப்பாளர்