இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - VIDEO

சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக  இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் சந்திக்க உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இன்றைய போராட்டத்தை திரும்ப பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:

Post a Comment