ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இவற்றுடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தமிழகத்தில் 5 வகையாகா குடும்ப அட்டைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான குடும்ப அட்டைதாரா்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தொிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக அரசுக்கு ஏற்கனவே நிதிச்சுமை அதிகமாக உள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் கஜா புயலால் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்கும் நிதி தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழலில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 


வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோாிக்கை ஏற்க கூடிய வகையில் தான் உள்ளது. நீதிபதியாக உள்ள எனக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசு தலைமை வழக்கறிஞரான உங்களுக்கும் இந்த தொகை வழங்கப்படுகிறது. நம்மைப் போன்றவா்களுக்கு இந்த தொகையை வழங்குவதற்கு பதிலாக தரமான சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையிலான நலத்திட்டங்களில் இதனை பயன்படுத்தலாமே என்று கருத்து தொிவித்தனா்.

No comments:

Post a Comment