பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14ம் தேதி போகி அன்றும்அரசு விடுமுறை எனதமிழக அரசு அறிவித்துள்ளது. 14ம் தேதி விடுமுறையை ஈடு செய்ய, பிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, வரும் 15, 16, 17 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. வார இறுதியை தொடர்ந்து, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும், ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையில், 14ம்தேதி போகி அன்றும், அரசு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 6நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உற்சாகத்தில்உள்ளனர்.
14ம் தேதி விடுமுறையைஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிகப்பட்டுள்ளது.