ஜன.14 அரசு விடுமுறை

ஜன.14 ம் தேதி அரசு விடுமுறை
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,14 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்.,9 சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும்.பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான 14ல் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி அன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment