ரூ.200க்கு மேல்,விற்பனையா?,பில்,கொடுப்பது,கட்டாயம்


சென்னை: 'பொதுமக்கள், 200 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு, கட்டாயம், 'பில்' வழங்க வேண்டும்' என, வணிகர்களுக்கு, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017 ஜூலை, 1ல், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி, வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கு, பொது மக்கள் வரி செலுத்துகின்றனர். இது, அரசுக்கு சென்றடையவதை உறுதி செய்யும் வகையில், பொருட்களுக்கு, கண்டிப்பாக, பில் வாங்க வேண்டும்.

இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: வாடிக்கையாளர் செலுத்தும், ஜி.எஸ்.டி.,யை, வணிகர்கள், அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும். பல வணிகர்கள் செலுத்தாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால், அவர்களுக்கு, வணிகர்கள் கண்டிப்பாக, 'பில்' வழங்க வேண்டும்.

வணிகர்கள் பில் தராவிட்டால், வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.