திருச்சி:''கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், 22ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.


திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுவோரை, அங்கன்வாடி மைங்களில் துவங்க உள்ள, 'கிண்டர் கார்டன்' வகுப்புகளுக்கு, தமிழக அரசு, பணிமாறுதல் செய்துள்ளது.

இதை தவிர்த்து, கிண்டர் கார்டன் மற்றும் மாண்டி சோரி பயிற்சி முடித்த, முன்பருவக் கல்வி பயின்ற ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்.கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசு உத்தரவை புறக்கணிப்பதோடு, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், அந்த உத்தரவை வாங்க மாட்டோம்.

ஏற்கனவே, மதுரையில் நடந்த, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திலும், இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம், வரும், 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.எங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.