வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்தியவங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அறிக்கை வெளியிட்டுள்ளது.

அகில இந்தியவங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவைசேர்ந்து வரும்8 மற்றும் 9-ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக 2 ஆணையங்களும் மத்திய அரசிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட தேதிகளில், அநேக வங்கி பணிகள் முடங்கவாய்ப்புள்ளது.

பேங்க் ஆப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள், தங்களுக்கு இது தொடர்பாக அறிக்கை வந்துள்ளதாக உறுதிசெய்தனர்.இதனால் பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் முடங்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில், பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுகுறிப்பிடத்தக்கது. விஜயா வங்கி, தேனாவங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய பொதுத்துறை வங்கிகளைஒன்றாக இணைப்பதற்கு எதிராகஇந்த போராட்டம் நடத்தப்பட்டது.