சென்னை: 'வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட அறிக்கை:இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், எங்களின் நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்காமல் உள்ளது.எங்கள் போராட்டத்தின் போது, மூன்று முறை, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக, அரசு தரப்பு ஏமாற்றுகிறது. எனவே, 30ம் தேதி முதல், சென்னை, தேனாம்பேட்டை, டி.பி.ஐ., கல்வி வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.