புதுடெல்லி வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து ரீஃபண்டுக்காக இனிமேல் 63 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரிட்டர்ன் தாக்கல் செய்த ஒருநாளில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.


🌻அடுத்த தலைமுறைக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறைக்கான மென்பொ ருளை உருவாக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

🌻வருமானவரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்கிறது?- பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

🌻ரூ.4,241.97 கோடி மதிப்பில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட *இ-பைலிங், சென்ட்ரலைஸ்ட் பிராஸஸிங்* சென்டர் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

🌻இந்தத் திட்டத்தின்படி தற்போது வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பின், அதைப் பரிசீலனை செய்து மீண்டும் அவர்களுக்குப் பணத்தை அளிக்கச் சராசரியாக 63 நாட்கள் ஆகும்.

🌻 இந்நிலையில் இந்த புதிய மென்பொருள் மூலம் அது ஒருநாளில் முடிந்துவிடும். இந்தப் புதிய மென்பொருள் தயாரிக்கும் பணி இன்போசிஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

*இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:*

🌻''வருமான வரி ரிட்டர்ன் தாக்கலை எளிமைப்படுத்தியும், ரீஃபண்ட் வழங்கும் நாட்களை 63 நாட்களில் இருந்து ஒருநாளாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

🌻அதற்கான மென்பொருளைத் தயாரிக்க ரூ. 4,242 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

🌻இந்த மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும் இந்த மென்பொருள் 3 மாத சோதனை முயற்சிக்குப் அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.

🌻இந்த புதிய திட்டம் வருமான வரி செலுத்துதலை இப்போதுள்ள நிலையைக் காட்டிலும் மேலும் எளிமையாக்கும்.

🌻 ஏதேனும் தவறுகள் நடந்தால் விரைவாகச் சரி செய்யும்.

🌻ஏற்கெனவே இருக்கும் சிபிசி ஐடிஆர்-1.0 திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1,482 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1.83 லட்சம் கோடி வருமானவரி செலுத்துவோருக்கு ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது. ”

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

🌻இந்தப் புதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் கணக்கில், முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இருக்கும்.

🌻அந்தப் படிவத்தில் அவர்களின் பெயர், பான் எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் ஊதியம், வட்டி வருவாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மட்டும் வரி செலுத்துவோர் குறிப்பிட்டால் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

🌻மேலும், இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரிட்டர்ன் பரிசீலனை செய்வதில் அதிகமான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை நிலவும், ரிட்டர்ன்களை விரைவாகப் பரிசீலனை செய்ய முடியும்,

🌻குறிப்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தலையீடு இல்லாமல் விரைவாக ரிட்டர்ன்கள் பரிசீலிக்க முடியும் என்று வருமான *வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*