தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து 6 நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!


 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வது 6 நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1. அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

2. மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முன்னுரிமை வழங்கவேண்டும்.

3. தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு அது சார்ந்த கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

5.பணி ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் 10,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும்.

6. தற்காலிக பணத்தைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த உரிமையும் கோர முடியாது போன்ற நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.