சென்னை:இன்று முதல், 17ம் தேதி வரை, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை நாள் என்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, இந்த ஆண்டு, நீண்ட விடுமுறைகளை உடையதாக மாறியுள்ளது. அரசின் காலண்டர் படி, வரும், 15, 16, 17ம் தேதி மட்டுமே விடுமுறை நாள்.ஆனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், 14ம் தேதியான திங்கள் கிழமையும், அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நேற்றுடன் பள்ளி, கல்லுாரிகளுக்கான வகுப்புகள் முடிந்தன. இன்று முதல், 17ம் தேதி வரை தொடர்ந்து, ஆறு நாட்கள் விடுமுறை. பின், 18ம் தேதி மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்; 18ம் தேதி மட்டும் விருப்ப விடுப்பு எடுத்தால், 19, 20ம் தேதியும் விடுமுறை கிடைக்கும்.எனவே, தொடர்ந்து ஒன்பது நாட்கள் வரை விடுமுறை கிடைப்பதால், மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.