தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்


புதுடில்லி: தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வு எழுதும் போது சந்திக்கும் பிரச்னைகளை களையவும், அவரகள் வளர்ச்சியை முன்னிறுத்தி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்,. இந்தியா மட்டுமல்ல ரஷ்யா, நேபாள், குவைத், சவுதி அரேபியா ,சிங்கப்பூரில் வசிக்கும் மாணவர்களும் மோடியுடன் கலந்துரையாடுகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.