தானியங்கி அபராதம் விதிக்கும் முறை நெடுஞ்சாலைகளில் விரைவில் அறிமுகம்

சென்னை, ''அதிக விபத்துகள் நடக்கும், செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையில், தானியங்கி அபராதம் விதிக்கும் முறை, விரைவில், அறிமுகமாக உள்ளது,'' என, தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு மன்றத்தை துவக்கி வைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழகத்தில், 16 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், சாலை விபத்துக்களால், ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். உயிரிழப்புகள்தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால், 2018ல், 25 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம், அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. இதனால், 12.48 கோடி போக்குவரத்து வாகனங்கள் உள்ள நிலையில், விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அதிவேகத்தில் பயணிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் விபத்தில் உயிரிழப்பது, வேதனை அளிக்கிறது.எனவே, பள்ளிகளில், சாலை பாதுகாப்பு குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும்; பள்ளிகளில், சாலை பாதுகாப்பு மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. இதன்படி, சாலை பாதுகாப்பு மன்றத்தை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்துஉள்ளார்.விழிப்புணர்வுஇந்த மன்றத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், போக்குவரத்து அதிகாரிகள் பயிற்சி அளிப்பர். பயிற்சி பெறுவோர், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதனால், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்.சாலை பாதுகாப்புக்காக, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 65 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், அதிக விபத்துகள் நடக்கும், செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையில், 25 கோடி ரூபாய் செலவில், தானியங்கி அபராதம் விதிக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.அந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா வழியாக, விதிமீறலில் ஈடுபடும் வாகனம் கண்காணிக்கப்பட்டு, அடுத்த சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து, மற்ற நெடுஞ்சாலைகளிலும், இது அறிமுகம் செய்யப்படும். அதேபோல, 'லைசென்ஸ்' வழங்குவது உள்ளிட்டவற்றையும், தானியங்கி முறையில் செயல்படுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:நாட்டில், மக்கள் தொகையும், வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், விபத்துகள் அதிகரிக்கின்றன. 'லேப்டாப்' சாலை விதிகள் சார்ந்த பாடங்கள், 1, 6 மற்றும் பிளஸ் 1ல் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரிக்குள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தி, பள்ளி கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பங்கேற்றனர்.