சென்னை, வனப்பகுதியில் அமைந்துள்ள, 20 பழங்குடியினர் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, வேலுார் வனப்பகுதி, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி பகுதிகளில், 20 பழங்குடியினர் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள் வனத்துறையால் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.