எஸ்.ஐ., எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜன. 6-விரல் ரேகை பிரிவு, எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக காவல் துறையின், விரல்ரேகை பிரிவில் காலியாக உள்ள, 202 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான, எழுத்து தேர்வு, 2018 டிச., 22, 23ல், எட்டு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
எழுத்து தேர்வு முடிவுகள், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், நேற்று வெளியிட பட்டன. பொது விண்ணப்பதாரர்களுக்கு, சென்னை தேர்வு மையத்தில், உடற்கூறு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்பட உள்ளது. துறை விண்ணப்பதாரர்களுக்கு, நேரடி நேர்காணல் தேர்வு, இக்குழும அலுவலகத்தில், விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்வு குழும இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment