புதுச்சேரி:ஜிப்மரில் பி மற்றும் சி பணியிடங்களுக்கு ஆன்-லைனில்விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட், யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட், நர்சிங் ஆபிசர் உள்ளிட்ட பி பணியிடங்களும், ஸ்டெனோகிராபர்-2, எம்.டி.எஸ்., காப்ளர் உள்ளிட்ட சி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் வரவேற்கப்பட்டு வருகிறது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணி வரை சமர்பிக்க வேண்டும்.எவ்வளவு பணியிடங்கள்ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-3 பணியிடங்கள்,நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-2 பணியிடங்கள், யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-1, நர்சிங் ஆபிசர்- 60, ஸ்டெனோகிராபர்-3,எம்.டி.எஸ்., காப்ளர்-1 என மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது-40, ஓ.பி.சி.,-18, எஸ்.சி.,-3, எஸ்.சி.,-9 என இட ஒதுக்கீடு வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.பதவி வாரியாக பார்க்கும்போது, ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-பொது-2, ஓ.பி.சி.,-1,நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பொது-1, ஓ.பி.சி.,-1,யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பொது-1, நர்சிங் ஆபிசர் பொது-34, ஓ.பி.சி.,-15, எஸ்.சி.,-2, எஸ்.டி..,-9,ஸ்டெனோகிராபர் பொது பிரிவு-1, ஓ.பி.சி.,-1, எஸ்.சி.,-1, எம்.டி.எஸ், காப்ளம் பொது-1 என தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விபரங்களுக்குwww.jipmer.puducherry.gov.in அல்லதுெஹல்ப் லைன்-18002667072 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.