சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை என்பதால், அனைத்து, ஏ.டி.எம்.,களிலும் முழுமையாக பணம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை இன்று துவங்குகிறது. பொங்கலை முன்னிட்டு, வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுமையாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில், எப்போதும் பணம் இருக்கும் வகையில், ஏ.டி.எம்.,களில், முழுமையாக நிரப்ப, அனைத்து வங்கி கிளைகளுக்கும், நிர்வாகம் உத்தரவிட்டது.இதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து, ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், நேற்று முழுமையாக பணம் நிரப்பப்பட்டுள்ளன, என்றனர்.