ஆசிரியர்கள் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
THE HINDU TAMIL
தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப முடியுமா? என ஆசிரியர்கள் மட்டும் நாளை மதியம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் அடங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதன்பேரில் கடந்த டிசம்பர் மாதம் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தது.

தவறவிடாதீர்

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நேர்ந்த பரிதாபம்: தந்தையின் கண்முன்னே மகள் பேருந்தில் சிக்கி பலி
ஆனால் அதன் பின்னரும் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காத நிலையில் மீண்டும் போராட்டம் துவங்கியது. நீதிமன்றம் பணிக்கு திரும்ப உத்தரவிட்டும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மதுரைக் கிளை ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆலோசனைக்கூறி, போராட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கில் நீதிபதி கிருபாகரன் சில கேள்விகளுக்கு ஆசிரியர் அமைப்பும், பள்ளிக்கல்வித்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் சங்கங்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணக்கு வந்த போது, ஆசிரியர் சங்கங்களின் தரப்பு, பள்ளி கல்வி துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பினார்.

ஆசிரியர் சங்க வழக்கறிஞரிடம் நீதிபதி எழுப்பிய கேள்வி:

ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையா? ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும். தொழிலாளிகள் போல் சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகா?

கற்பிப்பது தான் உங்கள் பணியின் நோக்கம் என்றால் தேர்வு நேரம் தான் போராட்டத்திற்கான நேரமா? தனியார் பள்ளியில் படிக்கும் உங்களின் பெரும்பாலானோரின் குழந்தைகளுக்கு போராட்டத்தை கைவிடும் வரை கற்பிக்க கூடாது என உத்தரவிட்டால் ஏற்பீர்களா?

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? உயர் நீதிமன்றத்தில் ரூ.6,500 ஊதியத்திற்கான துப்புரவு பணியாளர்கள் மற்றும் ரூ.18 ஆயிரத்திற்கான அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் போட்டியிடுகிறார்கள் தெரியுமா?

கூரியர், உணவகங்கள் மற்றும் உணவுக் கொண்டுச் செல்லும் நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா? அரசியல் வாதிகளை திட்டுகிறீர்கள். ஆனால் தாங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளை சரமாரியாக ஆசிரியர்கள் வசைப்பாடுவது சரிதானா? தேர்வு நேரத்தை கருதில் கொண்டு ஆசிரியர்கள். மட்டும் கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா ? என நாளை மதியம் ஆசிரியர்கள் சங்கங்கள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். என உத்தரவிட்டார்.

பின்னர் அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவது ஏற்க முடியாது அரசு அதில் கவனம் செலுத்தி உரிய தீர்வை காணவேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் உத்தரவுகளாக பிறப்பிக்காமல் மாணவர்கள் நலன் கருதி அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்குகிறேன். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். பின்னர் வழக்கை நாளை ஜன.29 மதியத்துக்கு ஒத்திவைத்தார்.