அரசு பணியாளர்களுக்கு , பொங்கல் போனஸ்

சென்னை: அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
முறையான காலமுறை சம்பளம் பெறும், 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, 2018ல், 3,000 ரூபாயை, உச்ச வரம்பாக நிர்ணயித்து, பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, இம்முறையும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த, முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள்; தொகுப்பூதிய பணியாளர்கள்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; சிறப்பு காலமுறை ஊதிய ஊராட்சி செயலர்கள்; ஒப்பந்த பணியாளர்கள்; தினக்கூலி ஊழியர்கள் ஆகியோருக்கு, சிறப்பு போனசாக, 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும்.தமிழக அரசு பணியில் உள்ள, 'ஏ' மற்றும், 'பி' பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலை மானியக் குழு, தொழில்நுட்ப உதவிக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. ஓய்வூதியர்களுக்கு ரூ.500'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment