'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்றே கடைசி

சென்னை: 'எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது' என, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.
புதுடில்லி, ஜோத்பூர், பாட்னா, நாக்பூர் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, மே, 25, 26ல் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.தேர்வு எழுதும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும், தலா, 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவது கட்டாயம். குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெறாவிட்டால், அவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.இந்தாண்டு, நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோருக்கு, நவ., 30ல் ஆன்லைனில் அடிப்படை தகவல் பதிவு துவங்கியது. இன்று மாலை, 5:00 மணிக்குள் பதிவுகளை முடிக்க வேண்டும். பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற விபரம், வரும், 7ம் தேதி தெரிய வரும்.அடிப்படை பதிவுக்கு, கூடுதலாக தேவைப்படும் விபரங்களை பதிவு செய்ய, வரும், 8ம் தேதி முதல், 18ம் தேதி வரை அவகாசம் தரப்படும். இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், வரும், 22ல் வெளியாகும். நுழைவுத் தேர்வுக்கான தகவல் கையேடு, வரும், 29ம் தேதி வெளியிடப்படும்.தேர்வுக்கான கட்டணம் செலுத்துவது; தேர்வு மையங்களுக்கான விருப்பம் தெரிவிக்கும் பதிவு, வரும், 29ம் தேதி முதல், பிப்., 17 மாலை, 5:00 மணி வரை நடக்கும். தேர்வுக்கான ஹால் டிக்கெட், மே, 15ல் வெளியிடப்படும் என, எய்ம்ஸ் நுழைவு தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment