சென்னை:இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கை பதிவுக்கு, நாளை கடைசி நாள்.


இக்னோவில், காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம். அவ்வாறு சேர விரும்புவோர், உரிய பட்டப் படிப்புடன், நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இது தவிர, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும், காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்ய, நாளை கடைசி நாள். பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, மாணவர் சேர்க்கை பதிவுக்கு, கூடுதலாக சில நாட்கள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.கூடுதல் விபரங்களை, 044 -- 2661 8438, 2661 8039 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் https://onlineadmission.ignou.ac.in என்ற, இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.