சமூக வலைதளங்களில், ரூபாய் மற்றும் நாணயங்கள் படத்துடன் செய்திகள் வலம் வருகின்றன அவை உண்மையா!  ஒரு லட்சம் ரூபாய் நாணயம், முதல் 125 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதாக, சமூக வலைதளங்களில், படத்துடன் செய்திகள் வலம் வருகின்றன;
இவை போலியானவை. யாரும் நம்ப வேண்டாம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
புதிதாக, 20, 100, 125, 200 ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி, அதன் புகைப்படங்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இதில், பிரதமர் மோடி, 125 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் வலம் வரும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை. இது போன்ற நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
மேலும், 350 ரூபாய், 5,000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக, அதன் புகைப்படங்களும் பரவுகின்றன. இவற்றை, பொது மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.