தேர்தல் தேதி அறிவிப்பு?


புதுடில்லி: லோக்சபாவுக்கு, ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி வெளியானதாக, சமூக வலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது. 'இந்த தகவல் உண்மையில்லை' என, தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, டில்லி போலீசில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.


'சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது; இதுபோன்ற வதந்தியை பரப்பும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, போலீசிடம், தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.