சென்னை: தமிழக முதல்வர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை ஹைகோர்ட்டில் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


கடந்த 7 நாட்களாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராடுகிறார்கள்.

தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்று ஆசிரியர்கள் தரப்பு காரசார விவாதங்களை வைத்தது.

பதில் 
என்ன பதில்
இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பு சென்னை ஹைகோர்ட் கிளையில் பதில் அளித்துள்ளது. அதில், நாங்கள் அனைவரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பணிக்கு திரும்புவோம். பேச்சுவார்த்தையை தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் முடிவில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம்.

முடியாது 
எங்களால் முடியாது

2 ஆண்டுகளாக போராடிவிட்டு எங்களால் இப்போது வெறுமனே பணிக்கு திரும்ப முடியாது. நாங்கள் பட்ட கஷ்டம் அப்படியே வீணாவதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி பணிக்கு திரும்ப முடியும்.அரசு 
திட்டவட்டம்

அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அரசு எங்களுடன் பேச முடியாது என்றுள்ளது. எங்கள் ஊழியர்கள் பலர் ஜெயிலில் இருக்கிறார்கள். முதல்வர் பேசாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. முதல்வர் இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக உள்ளார்.நீதிபதிகள் 
நீதிபதிகள் கருத்து

இது தொடர்பாக பதில் அளித்த நீதிபதி கிருபாகரன் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை அரசுக்கு நிர்வாகிகள் கொண்டு செல்ல விடும். அரசு வழக்கறிஞர் இதில் உதவ வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றால் இருதரப்பு கோரிக்கையை அரசுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கொண்டு செல்ல வேண்டும், என்று கூறியுள்ளார்.