>> தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இன்று இல்லை - பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு.

>> இன்று மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

>> மாணவர்கள் போராட்டம் - பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி களுக்கு வரக் கூடாது என கண்டித்து தமிழ்நாடு முழுவதும், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி போராட்டம் செய்கின்றனர்.

>> ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று (ஜன.,28) நடக்கும் கூட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்ய உள்ளனர்.

>> ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

>> நாளை (28-01-2019) முதல் 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக் குழு ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் உடன் இணைந்து முழுவீச்சுடன் களமிறங்குகிறது.