ஊ.ஒ.ந.நி.பள்ளி,
கீழ்மின்னல்,15.02.19,வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் வேலூர் மாவட்டதுணை ஆட்சியர் அவர்கள், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்தி அவர்கள்,ஆற்காடு சட்டமன்ற திரு.ஈஸ்வரப்பன் அவர்கள்,கலவை சச்சிதானந்த சுவாமிகள் தொழிலதிபர் லட்சுமணன்அவர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் சீனு பவானந்தன்,சி.கிருஷ்ணவேணி,வாலாஜா வட்டாட்சியர் பூமா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கீழ்மின்னல் கிராம மக்கள் நன்கொடைகளாக பணமும் பொருள்களும் வாரி வழங்கினர்.

CMC டைரக்டர் ஜே.வி.பீட்டர் அவர்கள் கலந்துகொண்டு பள்ளிக்கு கழிப்பறை தரைதளம் கட்டித்தரவும்,பெஞ்ச் டெஸ்குகள் வழங்குவதாகவும் கூறினார்.

தலைமையாசிரியர் இரா.சி.வாசவி கடந்த 3 மாதங்களாக சனி ஞாயிறுகளில் கூட பள்ளிக்கு சென்று பள்ளி கல்விக்குழுவினருடன் நன்கொடைகள் வசூலித்து முக்கியப்பிரமுகர்களை வரவழைத்து இவ்விழாவை சிறப்பாக நடத்தினார்.

முன்னாள் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் விழா ஏற்பாடுகளில் கலந்துகொண்டு உதவிசெய்தனர்.

தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ரூ.ஒரு இலட்சத்திற்கான காசோலையை புரவலர் திட்டத்திற்கு வழங்கினார்.

தலைமையாசிரியர் ஏற்கனவே பெறப்பட்ட நன்கொடையில் ரூ.ஒரு இலட்சத்தில் புரவலர் திட்டத்தில் டெபாசிட் செய்துள்ளார்.