திருநெல்வேலி, ''தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச 'லேப்டாப்' வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஆடிட்டர் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. பிளஸ் 2 படித்தாலே வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கும் விதத்தில் பிளஸ் 2 வகுப்பில் கணிதவியல் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இதுவரை பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இனி எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க மத்திய அரசின் உதவி கோரியுள்ளோம். வரும் கல்வியாண்டில் ஏராளமான புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.