தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்


சென்னை: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, சத்யபிரதா சாகு செயல்பட்டு வருகிறார். விரைவில், லோக்பா தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன், மருத்துவ பணிகள் தேர்வாணைய தலைவராகவும் பணியாற்றி வந்தனர். கூடுதல் செயலர்களாக, இருவரும், ஓராண்டுக்கு பணியில் இருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment