அறநிலைய துறை தேர்வுக்கு அறிவுரை

Image result for EXAM

சென்னை: ஹிந்து அறநிலைய துறை தேர்விற்கு, தேர்வு மைய குழப்பமின்றி செல்ல, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஹிந்து அறநிலைய துறையில், நிர்வாக அதிகாரி நிலை - 3, 4 பதவிகளுக்கு, இன்றும், நாளையும், தனித்தனியே தேர்வு நடக்கிறது.எனவே, தனி தனியே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு, தனித்தனியாக தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு விண்ணப்ப தாரருக்கும், அவர்களின் புகைப்படம் அச்சிட்ட விடைத்தாள் வழங்கப்படுகிறது. விடைத்தாள்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூடங்களில் மட்டுமே இருக்கும். தேர்வு கூடம் மாறினால், தேர்வில் பங்கேற்க முடியாது. எனவே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு சென்று, தேர்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment