வேலுார், கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த, வேலுார் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு, 'வெப்' ரத்னா விருது வழங்கப்பட்டது.வேலுார் மாவட்டத்தில், அனைத்து அரசு துறைகளின் பல்வேறு பொது தகவல்கள், திட்டங்கள், vellore.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டு வருகின்றன.வேலுார் மாவட்ட வரலாறு, சுற்றுலா தலங்கள், மாவட்டம் குறித்த, முழு தகவல்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ், ஆங்கிலத்தில், அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.இதனால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள மக்கள், வேலுார் மாவட்டத்தின் சிறப்பு குறித்து அறிந்து கொண்டனர்.தென் மாநிலங்களில், உடனுக்குடன் அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில், வேலுார் மாவட்டம் முன்னணியில் திகழ்கிறது. இதையடுத்து, வேலுார் மாவட்டத்துக்கு, வெப் ரத்னா தங்கவிருது அறிவிக்கப்பட்டது.டில்லியில், நேற்று முன்தினம் நடந்த விழாவில், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை,வேலுார் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு வழங்கினார்.