அரசுப்பள்ளி ஆசிரியர்கள் திறமையான ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகம் காட்டுங்கள் : நடிகர் சூர்யா வேண்டுகோள்


நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது, அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் ஃபவுன்டேஷன் கடந்த 10 ஆண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேகொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம். 2019-ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். ப்ளஸ் டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப்போடும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி 80561 34333 / 98418 91000" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!


No comments:

Post a Comment