சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார்.

 அண்ணா, பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங், கிடையாது  தொழில்நுட்ப ,கல்வி, இயக்குனரகத்துக்கு, மாற்றம்

தமிழகத்தில்,பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,இன்ஜி.,கல்லுாரிகளில் சேர விரும்புவோருக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. இந்த கவுன்சிலிங், நடப்பு கல்வியாண்டில், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது.

அண்ணா பல்கலை வழியே, 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த கவுன்சிலிங்கை, வரும் கல்வி யாண்டு முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் வழியே நடத்த, தமிழக உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது. 


கவுன்சிலிங் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக, அண்ணா பல்கலை துணை வேந்தர், சுரப்பாவும், உறுப்பினர் செயலராக, பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரிய ராஜும் நியமிக்கப்பட்டனர்.இதுவரை உறுப்பின ராக இருந்த, தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனர், விவேகானந்தன், இந்த ஆண்டு துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கமிட்டி ஒருங்கிணைப்பாளராக,உயர் கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு

உள்ளார். இதற்கு, பல்கலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுரப்பா விலகல்இந்நிலையில், கவுன்சிலிங் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து, துணைவேந்தர் சுரப்பா விலகி உள்ளார். தன் விலகல் கடிதத்தை, உயர்கல்வி செயலருக்கு, அவர் அனுப்பியுள்ளார். இது குறித்து,துணைவேந்தர் சுரப்பா கூறியதாவது:இன்ஜி., பாடம் நடத்துவது, பாட திட்டம் தயாரித்தல், ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு, அண்ணா பல்கலை,அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆராய்ச்சி பணிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில், பேராசிரியர்களுக்கு அதிக பணிகள் உள்ளன. மேலும், பொது தேர்தல் பணிகளையும், பேராசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.

எனவே, இன்ஜி., கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. எங்களை பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக கவுன்சிலிங்குக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இதில், எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் உறுதிஇதற்கிடையில், கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்துள்ளது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது:தமிழக உயர்கல்வி துறை கமிட்டி தான், அண்ணா பல்கலை வழியே, கவுன்சி லிங்கை நடத்தி வருகிறது. வரும் கல்வி யாண்டில், அண்ணா பல்கலைக்கு பதில், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்து, விரிவான ஆலோசனை நடத்தப்படும்.

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஏற்கனவே,

கவுன்சிலிங்கை தனியாக நடத்திய அனுபவம் உள்ளது.அதேபோல,அண்ணா பல்கலை வழியே நடத்தப்படும் கவுன்சிலிங்கிலும், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் முக்கிய பங்கு வகித்தது. அதனால், கவுன்சிலிங் நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

@block

subboxhd@பேராசிரியர்கள் வரவேற்பு

தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், இன்ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 'தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு பணிகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதனால், கவுன்சி லிங்கை, தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்து வது, பல்கலைக்கான சுமையை குறைப்பதாக இருக்கும். பல்கலையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம் பாட்டு பணிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்' என்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில், உயர்கல்வி துறையே, தனியாக கமிட்டி அமைத்து, கவுன்சிலிங் மற்றும் நுழைவு தேர்வுகளை நடத்துகின்றன.